நாய்கள் தொல்லை SDPi கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வழியுருத்தி   SDPI கட்சி கிழக்கு தொகுதி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


திருச்சி மாவட்டம் கிழக்கு தொகுதிக்குட்பட்ட வரகனேரி,மகாலட்சுமி நகர், விஸ்வாஸ் நகர் ஆகிய பகுதிகளில் வெறிபிடித்த நாய்கள் மற்றும் நோய்த்தொற்றுக்கள் சொறி சிரங்குகள் உள்ள தெருநாய்கள் அதிகரித்து சுற்றி திரிகிறது இதனால்

சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் பெண்களையும் வீட்டிற்கு வெளியே விளையாடும் குழந்தைகளையும்  வெறிபிடித்த நாய்கள் கடித்து விடுமோ என்ற அஞ்ச நிலையில் தினம் தினம் பயந்து பயந்து செல்கின்றனர்

மேலும் இரவு நேரங்களில் அவசர தேவைகளுக்கு கூட பெண்கள் குழந்தைகள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது .காலையில் வேலைக்கு சென்று மாலை இரவு நேரங்களில் களைப்பில் வீடு திரும்பும் ஆண்களுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது

இந்த தெருநாய் பிரச்சனை கிழக்குத் தொகுதி முழுவதும்  பல பகுதிகளில் இருப்பதால் பொதுமக்கள் கிழக்கு தொகுதி SDPi கட்சி நிர்வாகிகளிடம் தெரியபடுத்தி உள்ளனர் 

எனவே பொது மக்களின் கோரிக்கையை மாநகராட்சி அதிகாரிகளின் கவனத்திற்க்கு தெரியபடுத்தி நடவடிக்கை எடுக்க வழியுருத்தியும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக  SDPi கட்சியின் கிழக்கு தொகுதி தலைவர் தர்ஹா.முஸ்தபா, தலைமையில்  கிழக்கு தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்


இதுகுறித்து உரிய நடவடிக்கை திருச்சி மாநகராட்சி எடுக்காவிட்டால் கூடிய விரைவில் மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என கிழக்கு தொகுதி நிர்வாகிகள் அறிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில்.தொகுதி செயலாளர் அப்துல்ஃகாதர்,துணை தலைவர்கள் முகமது வாசிக், M.A.J.ஷேக்,துணை செயலாளர்கள் முகமது தௌபீக்,அப்துல் அஜீஸ்,பொருளாளர் ஷூஹைப்,ஆகியோர் கலந்து கொண்டனர்

Post a Comment

Previous Post Next Post

Contact Form