திருச்சி .ஆக 22
திமுக அரசின் 100 நாள் சாதனை துண்டு பிரசுரத்தை வழங்கி தொடங்கிவைத்த அமைச்சர்
திருச்சி தெற்கு மாவட்ட தி மு க கழகத்தின் சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் தி.மு.க அரசின் 100 நாள் சாதனையை விளக்கி துண்டுப் பிரசுரம் வினியோகம்
திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமையில்
திருவெறும்பூர் கடைவீதியில் பொதுமக்கள், மற்றும் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்ளிட்டோருக்கு திமுக அரசின் 100 நாள் சாதனை துண்டுப் பிரசுரத்தை வழங்கினார்
இதில் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனைகள் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கியது.மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பத்திரிக்கை ஊடகவியல்லாளர்களை முன்களப்பணியாளர்கள் அறிவித்தது.அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக ஆக்கியது.செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் நிவாரணத்தொகை அறிவித்தது.திமுக அரசு 100 நாளில் மக்களுக்காக செய்த பல்வேறு நலத் திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரத்தைஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பொதுமக்களிடம் வழங்கினார்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே என் சேகரன், காட்டூர் பகுதி செயலாளர் நீலமேகம், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் கருணாநிதி, துவாக்குடி நகர செயலாளர் காயாம்பூ, பேரூர் கழக செயலாளர் செல்வராஜ், திருவெரும்பூர் ஒன்றியக்குழு தலைவர் சத்யா கோவிந்தராஜ், துணை தலைவர் சண்முகம், திமுக நிர்வாகிகள் விபி குமார், சோம குணாநிதி, ஜெயலட்சுமிகுமார், கண்ணதாசன், பழனியப்பன்,சலாம் கயல்விழி, ஞானதீபம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.