எனது கணவர்எங்கே? மீட்டு தரக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் புகார்
திருச்சி ஸ்ரீரங்கம் வடக்குவாசல் | கொள்ளிடம் ரோடு பகுதியைச் சேர்ந்த நவீன் நிஷா,என்பவர் தனது கணவரை மீட்டுத்தர கோரி புகார்
இது சம்மந்தமாக நவீன் நிஷா கூறுகையில் தனக்கு திருமணமாகி ஐந்து வருடம்ஆகின்றது நானும் எனது கணவரும் சில மாதங்களே ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில்
எனது கணவரின் சித்தப்பா ராம்ராஜ், என்பவர் பேச்சைக் கேட்டு பல ஆண்டுகளாக என்னைப் பார்க்க வரவில்லை மேலும் இதுவரை என்னிடம் எந்த தொடர்பும் இல்லை இதனால் அவர் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை எனது கணவரின் சித்தப்பா ராம்ராஜ்யிடம் எனது கணவரை பார்க்க வேண்டுமென்று கேட்டாலும் அவர்கள் எனது கணவரை காட்டவில்லை எனது கணவர் எங்கு இருக்கிறார் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற நிலையில் உள்ளேன் எனது வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டது இது சம்மந்தமாக ராம்ராஜ் ,என்பவர் மீது நடவடிக்கை எடுத்து எனது கணவரை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்குமாறு மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்ததாகவும்
அதன் மீது உரிய நடவடிக்கை காவல் ஆணையர் எடுப்பதாக தெரிவித்ததாகவும் நவீன் நிஷா கூறினார்