சென்னையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு நுங்கம்பாக்கத்தில் தமிழக மாவட்ட அளவிளான குத்துச்சண்டை போட்டி கடந்த ஆகஸ்ட்13, 14, 15 நடைபெற்றது
இப்போட்டியில் கலந்து கெள்ள திருச்சி மாவட்டத்தில் இருந்து குத்துசண்டை விளையாட்டு வீரர்கள் மொத்தம் 14 நபர்கள் திருச்சி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் சார்பில் குத்துச்சண்டை பயிற்சியாளர் ஆர்.செல்வகுமார் சர்வதேச குத்துசண்டை வீரர் SDAT Coach .தலைமையில்
கடந்த 11-08-21 திருச்சியிலிருந்து ரயில் மூலமாக சென்னைக்கு சென்றனர் கடந்த 13,14,15 தேதிகளில் பல்வேறு பிரிவுகளில் குத்துசண்டை போட்டிகள் நடைபெற்றது இதில் Senior பிரிவில் மோகனபிரசாத், தங்கப்பதக்கமும்
ராஜகணபதி, மணிகண்டன், முகேஷ், பாலாஜி,ஆகியோர் வெண்களபதக்கும் வென்றார்கள்.youth பிரிவில் அவ்ரித் வெண்களமும் junior பிரிவில் ஜெயகாந்த், கோகுல், ஆகியோர் வெண்கல பதக்கத்தையும் sub juniour பிரசாந்த், ஆகேஷ், ஆகியோர் வெள்ளி பதக்கத்தையும் அஜய், வெண்கள பதக்கத்தையும் வென்று திருச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இன்று திருச்சிக்கு வந்தவந்தடைந்த விளையாட்டு வீரர்களை ரயில் நிலையத்தில் மாற்றம் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
இந்நிகழ்வில் திருச்சி மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் செயலாளர் M.E.நடராஜன், மாற்றம் அமைப்பின் நிறுவனர் ஆர்.ஏ.தாமஸ் வழக்கறிஞர் ஆறுமுகம்,உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்பாபு,அல்லிகொடி,ரத்தினம்,மைக்கேல், அரவிந்த்,பெர்னாட் மணி,வெள்ளைசாமி,பாபு,ராஜேஷ் புதியபாதை அறக்கட்டளை நிர்வாகிகள் ஹேமலதா தீபலட்சுமி ஆர்மஸ்டாரங்ரபி அருணாசலம் , செந்தில்குமார் மற்றும் திரளான விளையாட்டு வீரர்கள் மற்றும் பெற்றோர் உள்ளிட்டோர் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்பான வரவேற்ப்பளித்தனர்