சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் - ஆகஸ்ட்-28
(அமிர்தாதேவி பலிதான தினம்)
பாரதீய மஸ்தூர் சங்கம் கடைபிடிக்கும் முக்கியமான தினங்களில் சுற்றுசூழல்பாதுகாப்பு தினமும் ஒன்றாகும்.
நமது தேசம் மாசற்ற தேசமாக இருக்க வேண்டும்என்ற சிந்தனையை தொழிலாளர்களுக்கு உருவாக்க வேண்டும் என்கின்ற நோக்கத்தில் ஒவ்வெரு ஆண்டும்ஆகஸ்ட் 28-ஆம் தேதியை சுற்றுச்சூழல் தினமாக கடைப்பிடித்து வருகிறோன்றினர் 28-08-1730 அன்று இயற்கைக்கு ஆதாரமான மரங்களை பாதுகாக்க அமிர்தாதேவி என்ற வீரப்பெண்மணி தன் இன்னுயிரைத் தந்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் கேஜட்லி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் கேஜ்ரி என்கின்ற வகையைச் சேர்ந்த பசுமையான மரங்கள் ஏராளமாக இருந்தன.
ஜோத்பூரின் அன்றைய மஹாராஜா அபயாசிங் என்பவர் தனக்கு அரண்மனைகள்,மாளிகைகள் கட்டுவதற்காக மரங்கள் வெட்டிக் கொண்டு வர தனது சேவகர்களை அனுப்பினார். அப்பகுதி மக்களோ, மரங்களை வெட்டினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமென்றும், மரங்களை தங்களது பிள்ளைகளைப் போல கருதுவதால் வெட்ட அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறி தடுத்தனர். எதிர்ப்பை மீறி சேவகர்கள் மரங்களை வெட்ட துணிந்த போது, அதை தடுக்க அமிர்தா தேவியின் தலைமையில் அக்கிராம மக்கள் மரங்களைக் கட்டிப்பிடித்தனர்.அப்போது, அமிர்தா தேவியை நோக்கி உன் தலையை வெட்டிவிடுவோம் என்று எச்சரித்தனர். வெட்டப்பட்டு கீழே விழும் மரங்கள், துண்டிக்கப்படும் எனது தலையை விட உயர்வானது" என்று கூறி அமிர்தா தேவி தனது போராட்டத்தில் உறுதியாக இருந்தார். போராட்டத்தை தலைமை தாங்கிய அவர் மரத்தை கட்டிப்பிடித்தபடி நின்றபோது அவரின் தலை முதலில் வெட்டப்பட்டது. தொடர்ந்து அவரது மூன்று மகள்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு மரங்கள் வெட்டப்பட்டது.
அந்தப்போராட்டத்தில் 69 பெண்கள் உட்பட 363-பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். அப்போது நடந்து முடிந்த ஈவு இரக்கமற்ற கொடூரமான இக்கொலை பாதகங்களை அறிந்த அரசன் கேஜட்லி கிராமத்திற்கு நேரடியாக வந்து கிராம மக்களை நேரில் சந்தித்து நடந்து முடிந்த படுபாதக செயல்களுக்கு மன்னிப்பு கேட்டார். அவர்களது உணர்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் மதிப்பு கொடுப்பதாக கூறிய அரசன், 'இப்பகுதியில் உள்ள மரங்களை வெட்டுவதற்கும்,மிருகங்களையும், பறவைகளையும் வேட்டையாடுவதற்கும் தடை விதித்து சட்டம்இயற்றப்போவதாக” தெரிவித்து அதை நிறைவேற்றவும் செய்தார். இதனை நினைவு கூறும் விதமாகவும், சுற்றுப்புற சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், கிராமங்கள் மற்றும் நகரங்களிலும் தொடர்ந்து பிரச்சார இயக்கங்களை பி.எம்.எஸ். நடத்திவருகிறது.பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல் அதன் ஒரு பகுதியாக இந்த வருடமும் ஆகஸ்ட்-28 அன்று சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் விதமாக ஊரகத்தில் செயல்படும் ஆர்.எஸ்.கே. பள்ளி வளாகத்தை சுத்தம் செய்வது மற்றும் மரக்கன்றுகள் நடுவது நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த சேவை பணியில் கலந்து கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதில்,மணோஜ்குமார்,செயல் தலைவர் பெல் மஸ்தூர் சங்கம் சங்கர், பொதுச்செயலாளர்,பெல் மஸ்தூர் சங்கம்.சிவகுமார், முதுநிலை பொதுமேலாளர் சிவில் துறை பெல் டவுன்சிப் (ஊரகம்) இந்த நிகழ்ச்சிக்கு பி.எம்.எஸ்-ன் நிர்வாக குழு , மற்றும் அனைத்து கமிட்டி மெம்பர்ஸ்களும் செயற்குழு உறுப்பினர்கள், காரியகர்த்தர்கள், சிவில் துறை ஊழியர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சிக்கு பங்கேற்று சிறப்பித்தனர்