கல்வி உதவிக்கு ஏற்பாடு செய்த மாற்றம் அமைப்பினர்

 மாணவிக்கு கல்வி உதவி

திருச்சி மரக்கடை பேலஸ் திரையரங்கம் பகுதியில் வசித்து வரும் ஆட்டோ ஓட்டுநர் ராமன் மற்றும் முத்துலட்சுமிக்கு தம்பதிகளுக்கு 2 பெண் மற்றும் 1 ஆண் என 3 குழந்தைகள் உள்ளனர் கொரோணா பாதிக்கப்பட்ட நிலையில் வருமானம் மிகவும் குறைந்த அளவில் வருவதால் குடும்பம் செலவுக்கே போதுமானதாக இல்லை இந்நிலையில் அவரது இரண்டாவது மகள் கவுசல்யா +2 முடித்து விட்டு B.com பட்டப்படிப்பு பயில விண்ணபித்துள்ளார் அவருக்கு கல்வி கட்டணம்  செலுத்த இயலாத நிலையில் குடும்பத்தினர் உள்ளனர்  


இம்மாணவி குடும்ப நிலையை அறிந்த மாற்றம் அமைப்பின் நிர்வாகி ஆர்.ஏ.தாமஸ் அவர்களை தொடர்பு கொண்டு  தெரிவித்தார் இத்தகவலை மாற்றம் அமைப்பின் நிர்வாகி ஆர்.ஏ.தாமஸ் அவர்கள் திருச்சி கோட்டை ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் Rtn.V.நாகராஜன்       அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார் திருச்சியில் தொடர்ந்து  பல உதவிகளை செய்து வரும் Rtn.V.நாகராஜன் அவர்கள்  அம்மாணவியின் கல்விகட்டணத்திற்க்கான முதல்  உதவி தொகை ரூ. 5000 மாணவிக்கு வழங்கினர், இதில் மாணவியின் பெற்றோர் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form