அகவிலைப்படி கேட்டு மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருச்சி. ஆகஸ்ட். 16,
மின்வாரிய ஊழியர்களுக்கு 1 .7.2021 முதல் வழங்கவேண்டிய அகவிலைப்படியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும். அகவிலைப்படி அடுத்த ஆண்டு வழங்கப்படும் என்று சட்டசபையில் வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்பப்பெற வலியுறுத்தி சிஐடியு, டிபிஏஎஸ், டி என்இபி இஎப், ஏடிபி, பொறியாளர் சங்கம், பொறியாளர் கழகம், தொழிலாளர் சம்மேளனம்,ஐஎன்டியூசி, ஏஇஎஸ்யூ ஆகிய மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மன்னார்புறத்தில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 1/7/2021 முதல் வழங்கப்படவேண்டிய பஞ்சப்படியை அடுத்த ஆண்டு. 1/4/2022. முதல் வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்த அறிவிப்பை திரும்ப பெற வழியுருத்தியும். ஏற்கனேவே அரசு உழியர்கள் மின்வாரிய உழியர்களுக்கு வழங்க வேண்டிய சரண்டர் என்ற சலுகை 2.ஆண்டுகளாக பறிக்கப்பட்டுள்ளது
மேலும் கொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு 1/1/2020ல் இருந்து வழங்கப்பட வேண்டிய பஞ்சப்படியை 1/7/2021 முதல் வழங்குவதாக அறிவித்த நிலையில் 18 மாத பஞ்சப்படி போன நிலையிலும்தமிழக அரசு அடுத்த ஆண்டு என அறிவித்துள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது எனவே இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்
இதில்,அனைத்து தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஸ்ரீரங்கம், மன்னார்புரம், லால்குடி, தா.பேட்டை, முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர், மணப்பாறை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.