தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்வி பட்டய தேர்வு அட்டவணை வெளியீடு ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும்.
தொடக்ககல்வி ஆசிரியர் பட்டயத்தேர்வு மாணவிகள் மாவட்ட ஆட்சியர்யிடம் மனு அளிக்க வந்தனர் அந்த மனுவில் தமிழக அரசு தேர்வுத்துறை தொடக்கப்பள்ளி ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் நேரடி தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள் இந்த கல்வியாண்டு கொரோனா பரவல் மற்றும் அதிகப்படியான உயிரிழப்புகள் காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து வகையான படிப்புகளும் நேரடி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் மூலமாகவே தேர்வு நடைபெற்று வருகிறது இந்நிலையில் ஆசிரியர் கல்வி பட்டயப்பயிற்சி படிப்பிற்கு மட்டும் நேரடி தேர்வாக நடத்த அறிவிப்பு செய்யப்பட்டிருப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது
இக்கல்வியாண்டில் எங்களுக்கு 75% சதவிதம் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது அகமதிப்பீட்டு தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது இவ்வாறு இருக்கையில் இந்த நோய் தொற்று பரவல் இன்னும் குறையாத காலத்தில் பொது தேர்வையும் ஆன்லைன் மூலம் நடத்த வேண்டுகிறோம் இச்சூழ்நிலையில் ஆசிரியர் கல்வி பட்டயத்தேர்வு மட்டும் மாணவ-மாணவிகளை நேரடியாக 14 நாட்கள் தேர்வு மையம் வரவழைத்து தேர்வு நடத்துவது எங்களுக்கு மிகுந்த மன வேதனையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது இது அரசு தேர்வுத் துறையின் திட்டமிட்ட செயலாகவே பார்க்கின்றோம் இது குறித்து கடந்த ஆட்சியில் பலமுறை கோரிக்கை வைத்தும் அனைத்தும் கிணற்றில் விழுந்த கல்லாகவே போய்விட்டதாக நினைக்கின்றோம்
எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் பெண்பிள்ளைகள் ஏழை மாணவிகள் முதல் தலைமுறை கற்கும் மாணவிகள் எங்கள் பெற்றோர் பெரும்பான்மையானவர்கள் கூலித் தொழிலாளிகள் கடன் வாங்கித்தான் கல்விக் கட்டணம் தேர்வு கட்டணம் கட்டி படித்து வருகிறோம் எங்கள் நிலைமையை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதற்கு அறிவிப்பு செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என மனு அளிக்க வந்தவர்கள் தெரிவித்தனர்