முகக் கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி பேருந்துகளில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு பிரச்சாரம்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரொனா மூன்றாம் அலை தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் பொதுமக்கள் கொரோனாவின் அஞ்சத்தை மறந்துவிட்டு சமூகஇடைவெளி இல்லாமலும் சனிடைசர் பயன்படுத்தாமலும் முககவசம் அணியாமலும் கொரோனா நோய்யின் அச்சமின்றிஉள்ளனர்
திருச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தோற்றின் தாக்கம் குறைவாக இருந்தாலும் அதை முழுமையாக கட்டுப்படுத்தவும் மீண்டும் வராமல் இருக்கவும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என திருச்சிகோட்டை காவல் நிலைய போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன், அவர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக விழிப்புனர்வை ஏற்படுத்தி வருகிறார் அதன் தொடர்சியாக 20க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏறி பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் மூன்றாம் அலை கொரோனா பற்றிய தாக்கத்தை எடுத்து கூறியும் வெளியில் வரும் பொழுது நாம் எப்படி மொபைல் மணி பரிசு காசு ஏடிஎம் கார்டு அனைத்தும் மறக்காமல் எடுத்து வைத்து கொள்வது போல் முக கவசம் கட்டாயம் எடுத்து அணிந்துகொள்ள வேண்டும்
உங்கள் பணிகளை முடித்துவிட்டு வீட்டுக்குள் செல்லும் முன் உங்களது கைகளையும் நீங்கள் அணிந்திருக்கும் மாக்ஸ்கையும் தண்ணிரில் நன்றாக சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும்
உங்கள் இல்லங்களில் முதியவர்கள் குழந்தைகள் இருப்பார்கள் அவர்களுக்கு நீங்கள் இல்லம் திரும்பியதும் தொற்று பரவாமல் தடுப்பதற்கு நீங்கள் பாதுகாப்பாக இல்லம் சென்றால் இல்லத்தில் இருப்பவர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று அறிவுரை கூறினார்
மேலும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உங்கள் மனைவி மற்றும் தாய் தந்தையர் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் நீங்களும் தயவு செய்து முக கவசம் அணிந்து பேருந்து இயக்க வேண்டும் நடத்துனர் பயணிகளை கட்டாயமாக முக கவசம் அணிய சொல்ல வேண்டும். மற்றவர்கள் மூலமாக உங்களுக்கு நோய் பரவினால் உங்களை நம்பி பயணிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கும் பரவும் அபாயம் உள்ளது என்று விழிப்புனர்வை ஏற்படுத்தினார் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் மதிவாணனின்அறிவுரையைக் கேட்டு பயணிகள் முகக் கவசத்தை அணிந்து கொண்டனர்