குடும்பத்தினருக்கு பாதுகாப்பு கேட்டு மனு
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுக்கா பெருமாள் பாளையத்தை சேர்ந்த இஸ்மாயில்,கூறுகையில்
முசிறி சோலை கண்ணனூர்பாளையத்தில் கடந்த ஆறு வருடங்களாக பேக்கிரி கடை வைத்து அவரும் தனது மனைவியும் நடத்தி வருவதாகவும் கடந்த 6/8/2021வெள்ளிக்கிழமைஇரவு 10 மணி அளவில் அப்பகுதியைச் சேர்ந்த காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் கடையை மூடச் சொன்னார்கள் நான் கடையை மூடும்போது ரூ.5.000, மாமுல் தருவதாக இருந்தால் கடையை திற இல்லை என்றால் கடையை திறக்க கூடாது என்று கூறினார்கள்
நான் மாமூல் கொடுக்க முடியாது என்று கூறி நீங்கள் தினமும் எனது கடையில் ரூ.200 வீதம் மாதம் 6000 ரூபாய்க்கு டி. மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிடுகிறீர்கள்
என்னிடம் எதற்கு பணம் கேட்கிறீர்கள் என்று கேட்டேன் அவர்கள் எதுவும்செல்லாமல் சென்றுவிட்டார்கள் பிறகு மறுநாள் இரவு 11.45 மணியளவில் உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் என் கடைக்கு வந்து மூடியிருந்த கடைக்குள் நான் எனது மனைவி.மகள். மூவரும் தூங்கி கொண்டு இருந்தோம்அப்போது இவர்கள் வெளிப்புறத்திலிருந்து கதவைத்திறந்து காவல் அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசிகடுமையாக தாக்கினார்கள் மேலும் எனது மனைவியையும் தாக்கி உதவி ஆய்வாளர் முத்தையன் கன்னத்தில் அறைந்தார் எனவே இது சம்பந்தமாக அந்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு மற்றும் மாவட்ட கண்காணிப்பாளருக்கும் மனு அளித்ததாக தெரிவித்தனர்