பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு காரணமான பாஜக ஒன்றிய அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகில் நடைபெற்றது.
மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள்களின் மனசாட்சியற்ற விலையேற்றம் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை சுரண்டும் வகையில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. மே மாதத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை எட்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதில் ஜூன் மாதத்தில் மட்டும் 6 முறை உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை நூறு ரூபாயை கடந்துள்ளது.
எனவே பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள்களின் விலை ஏற்றத்தை குறைக்க கோரியும் ஒன்றிய பாஜக அரசை எதிர்த்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பாலக்கரை ரவுண்டானா அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மமக மாவட்ட தலைவர் எம்.எ. முகமது ராஜா, தலைமையில் மமக மாவட்ட செயலாளர் பைஸல் அஹமத் வரவேற்புரையாற்றினார்.
தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராகிம் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் தமுமுக மாநில பொருளாளர் என்.ஷபிபுல்லா கான், மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் எம். ஜைனுல் அப்தீன், அவர்களும் கண்டன உரை நிகழ்த்தினர். மாவட்ட பொருளாளர் அஷ்ரப் அலி, நன்றி உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை அணி நிர்வாகிகளும், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என கலந்து கொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர்