தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகேதமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பாக தொடரும் பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர். ராயல் ராஜா, தலைமை வகித்தார் தலைமை நிலையச் செயலாளர் கனல்கண்ணன், மாநிலக்குழு திருப்பூர் சுடலை,ஜனநாயக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.
கண்டன உரையில் தொடரும் பெட்ரோல் டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
நன்றி
ReplyDelete