திருச்சியில் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!. நடைபெற்றது
திருச்சி ஜூலை 20:
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவை கண்டித்தும்,மத்திய அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் காவிரி தனபாலன்,தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பேரா.மைதீன்அப்துல்காதர்,கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர்.
முன்னதாக மாவட்ட பொருளாளர் அந்தோணிராஜ், துணை செயலாளர்கள் சேக்அப்துல்லா,முஹம்மதுபீர்ஷா, மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பார்த்தசாரதி லெனின்,ஆகியோர் பங்கேற்றனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பெரும் திரளாக பங்கேற்று தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்

