திருச்சி மாநகர காவல், பாரதிதாசன் பல்கலைகழக இளையோர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் SRM மருத்துவ கல்லூரி இணைந்து நடத்தும்சிறப்பு மருத்துவ முகாம்
திருச்சி மாநகர காவல் ஆணையர் கடந்த 01.07.2021 அன்று கொட்டப்பட்டுஇலங்கை அகதிகள் முகாமை பார்வை.யிட்டு முகாம்வாசிகளிடம் கலந்துரையாடினார்"
அதன் பின் முகாமில் உள்ளவர்களிடம்
குறைகளை கேட்ட மாநகர காவல் ஆணையர் அவற்றை நிவர்த்திசெய்யும் வகையில் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்
அதன் தொடர்ச்சியாக(19.07.2021) அன்று கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் மற்றும்சிறப்பு மருத்துவ முகாம், திருச்சி மாநகர காவல் பாரதிதாசன் பல்கலைகழகஇளையோர்செஞ்சிலுவை சங்கம் SRM மருத்துவ கல்லூரியுடன் இணைந்து நடத்தப்பட்ட
.
இந்த மருத்துவ முகாமில் பொது நலம், எழும்பியல், தோல், இதயம், வயிறு, காது, மூக்கு மற்றும் தொண்டை பிரிவுகளைச் சார்ந்த மருத்துவர்களை கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் வழங்கி சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இம்மருத்துவ முகாமில் திருச்சி மாநகர துணை ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு).R.சக்திவேல், பாரதிதாசன் பல்கலைகழக துணைவேந்தர் டாக்டர்.M.செல்வம், பதிவாளர் &விரிவுரையாளர் கோபிநாத் கணபதி, SRM மருத்துவ கல்லூரி துணை இயக்குனர்மருத்துவர் பாலசுப்பிரமணியன், SRM இளையோர் செஞ்சிலுவை சங்க நிர்வாகி மருத்துவர்.சிவக்குமார், கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாம் சிறப்பு துணை ஆட்சியர் ஜமுனாராணி, SRM மருத்துவ கல்லூரியை சேர்ந்த 30 மருத்துவர்கள் மற்றும் 20உதவியாளர்கள் பங்கு பெற்றனர்.
மேற்படி முகாம் திருச்சி மாநகர சட்டம் மற்றும்ஒழுங்கு. துணை ஆணையர் ,மேற்பார்வையில் சமூக இடைவெளி மற்றும்அரசின்வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிநடைபெற்றது.
இந்த முகாமில் கலந்துகொண்ட கொட்டப்பட்டு இலங்கை அகதிகள்முகாமைசேர்ந்த 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் மற்றும் சிறப்பு முகாம் வாசிகள் தங்களுக்குமிகவும் பயனுள்ள வகையில் இருந்ததாக தெரிவித்தனர்.




