அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து உறையூர் குறத்தெருவில் ( 17.07.2021) அன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் மாவட்ட செயலாளர்.சத்யா, தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம்.செல்வராஜ், ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து , துவக்கவுரையாற்றினார்.
இதில் AIYF மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் எம்.செல்வகுமார், AISF மாவட்ட செயலாளர் கே.இப்ராஹிம், TOPM மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சூர்யா,AISF மாநில துணை செயலாளர் ஜி.ஆர்.தினேஷ் குமார், AIBEA மாவட்ட செயலாளர் ஜி.ராமராஜ், தரைக்கடை மாவட்ட தலைவர் எஸ்.சிவா, AITUC மாவட்ட பொதுச் செயலாளர் க.சுரேஷ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்கள். AIYF மாநில பொதுச் செயலாளர் க.பாரதி, சிறப்புரை ஆற்றினார்.
இதில் ஒன்றிய அரசே தமிழ்நாட்டு மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை, தடுத்து நிறுத்து...
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 14 கோடி கொரானா தடுப்பூசிகளை பாரபட்சம் பார்க்காமல் உடனடியாக வழங்கிடு...
பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் ஆகியவற்றின் விலை உயர்வை திரும்பப் பெறு... உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுருத்தினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் AIYF மாவட்ட தலைவர் ஆர்.முருகேசன், மாவட்ட துணை செயலாளர் அ.சுதாகர், மாவட்ட பொருளாளர் கே.கே.முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.பி. ராஜா முகம்மது, கே.முருகன், ஆர்.சரன்சிங், பி.ரகுராமன், உள்ளிட்ட சுமார் 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் AIYF மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.கௌதம் நன்றியுரை கூறினார்