திருச்சி இ.பி.ரோடு பகுதி பந்தேகானத்தெரு அருகே உள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் அதிகமாக கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
திருச்சி பந்தேகானத்தெரு அருகே 4 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது.இந்த ரேஷன் கடைகளில் தமிழக அரசு அறிவித்த 14 இலவச பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனை வாங்குவதற்காக பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முறையாக முக்கவசம் அணியாமலும் சாலையின் இரு பக்கங்களிலும் காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த பகுதி குறுகிய சாலை என்பதால் இருசக்கர வாகனம் செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நீண்ட வரிசையில் காலையிலிருந்து பல மணிநேரம் முதியவர்கள், பெண்கள் வெயிலில் நீண்ட நேரம் நிற்க முடியதாதல் ஒருவருக்கொருவர் சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் ரேஷன் பொருட்களை வாங்க முந்திக் கொண்டு சென்றனர்
மேலும் அரசு கொடுக்கும் 14 வகை பொருட்களும் பேக்கிங் செய்து கொடுக்காததால் கடை ஊழியர்கள் ஒவ்வொரு பொருளாக மூட்டைகளில் இருந்து எடுத்து கொடுப்பதால் தாமதம் ஏற்பட்டு கூட்ட நெரிசல் அதிகரிக்க தொடங்கியது என கூறுகின்றனர்