25/6/2021செய்தி.
திருச்சிசங்கிலியாண்டபுரம் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் இருசக்கர வாகனத்தை பாடை -கட்டி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்தியாவில் தற்பொழுது பெட்ரோல் டீசல் விலை வேகமாக ஏறி கொண்டு வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 100 ரூபாயை நெருங்கி வருகிறது. இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்
திருச்சி சங்கிலியாண்டபுரம் அரசமரம் பஸ் நிறுத்தம் பகுதியில் பாலக்கரை பகுதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் ஷாஜகான்,தலைமையில் மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனே குறைக்க வலியுறுத்தி கோஷமிட்டு இருசக்கர வாகனத்தை பாடைகட்டி நூதன கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.