26/6/2021/சனிக்கிழமை செய்தி
திருச்சி.
விவசாய சங்கத்தினர் மற்றும் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அனைத்து தொழிற் சங்கத்தின் சார்பில்
திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 3வேளாண் சட்டம், தொழிலாளர் விரோத சட்டங்களை ஒன்றியஅரசு உடனே திரும்பப்பெற வேண்டும்.விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும், இலவச மின்சாரத்தை பறிக்க நினைக்கும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வழியுருத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் விடுதலைச்சிறுத்தைகள், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஐஎன்டியூசி, ஏஐடியுசி, மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம், சிபிஎம், ஏஐசிசிடியூ, உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் உட்பட 300க்கும்மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.