இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்டம் 34வது வார்டு சார்பாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பொருளாதார வசதியற்றவர்களுக்கு மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்புகள் வழங்கப்பட்டன.
தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய குடும்பத்தினருக்கு
திருச்சி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாகமாவட்டச் செயலாளர் கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி துவக்கி வைத்தார்.
இதில்வார்டு தலைவர் M.K அப்துல் ரஹீம், வார்டு செயலாளர் கிங்ஸ் ஜியாவுதீன்வார்டு பொருளாளர் ரஹமத்துல்லாவார்டு துனை தலைவர் S.ஜாபர் அலீவார்டு துனை செயலாளர் திருச்சி யூசுப்வார்டு இளைஞர் அணி முகமது யூசுப்வார்டு மாணவர் அணி ரியாஸ் அகமதுஅலுவலக உதவியாளர் s ரவிச்சந்திரன் மற்றும் வார்டு நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.