கொரோனா பேரிடர் காலத்தில் திருக்கோயில்களில் மாத சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்
அந்த வகையில், திருச்சி கிழக்கு தொகுதி, மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானர் சுவாமி திருக்கோயிலில்
மாத சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாட்சியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவியாக தலா ரூ.4,000, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப் பொருட்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வழங்கினார்..
இந்த நிகழ்வில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் .இனிகோ இருதயராஜ், மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர்.மு.மதிவாணன், மாவட்ட வருவாய் அலுவலர்.த.பழனிகுமார், திருச்சிராப்பள்ளி வருவாய்கோட்டாட்சியர் த.விஸ்வநாதன், இந்து சமய அறநிலையத்துறைஉதவி ஆணையாகள் .எஸ்.மோகனசுந்தரம்,த.விஜயராணி
இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், திருக்கோவில் ஊழியர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.