வாகனத்தில் சுழல் விளக்கு வைத்துக்கொண்டு வலம் வந்தபோலி ஆசாமிகள் இருவர் கைது
திருச்சி மாவட்டம், காட்டூர் எல்லைக்குடி விக்னேஷ் நகரை சேர்ந்த கிரண்சிங்,
வயது 40/21, த.பெ.அருணாச்சலம் (BHEL-ஓய்வு பெற்ற செக்கியூரிட்டி அதிகாரி)
Toivour Citizen Industrial Security Protection Force Private Ltd., (CISPF) toim
நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான TN-48-M-3718
Wagon R Car-ல் நீண்டகாலமாக சுழல் விளக்கு பொருத்தி, தன்னை ஒரு அரசுஉயர் அதிகாரியாக பொதுமக்கள் தோற்றத்திற்கு காட்சியளிக்க வேண்டும் என்றநோக்கத்தில் உலா வந்துள்ளார்.
மேலும், மேற்படி காரில் Press என்று ஸ்டிக்கரும்ஒட்டியுள்ளார். இன்று 23.06.21-ஆம் தேதி மதியம் சுமார் 1.30 மணியளவில் தலைமைதபால் நிலையம் அருகில் உள்ள BSNL அலுவலகத்திற்கு சுழல் விளக்கு பொருத்தியதனது சொந்த காரில் ஓட்டுனர் மணிகண்டன், வயது 23/21, த.பெ.சண்முகவேல்,எண்.4/266, கருணாநிதி தெரு, அண்ணாநகர், அரியமங்கலம்.ஆகியோர்வந்துள்ளனர். காவல் துறையினருக்கு இந்த தகவல்கிடைக்கப்பெற்று கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் மேற்படி நபரை விசாரித்ததில்,
அவர்சுழல்விளக்குபொருத்தியதற்கும், Pressஎன்றுஸ்டிக்கர்போன்றஅடையாளங்களை காரில் ஒட்டியதற்கான உரிய ஆவணங்கள் இல்லாதபடியாலும்,அரசு அதிகாரி போல போலியாக காட்சிப்படுத்திக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட மேற்படி கிரண்சிங் மற்றும் ஓட்டுனர் மணிகண்டன் ஆகியோர் மீது கண்டோன்மெண்ட் காவல்நிலைய குற்ற எண்.633/2021 u/s 420, 511 IPC r/w 190 (ii) M.V.Act-ன்படி வழக்குப்பதிவு செய்தும்,
வாகனத்தை பறிமுதல் செய்தும் மேற்படி கிரண்சிங் மற்றும் ஓட்டுனர் மணிகண்டன்ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்குஉட்படுத்தப்பட்டார்கள்.
இனிவருங்காலங்களில் இதுபோன்று அரசு ஆணையினை மீறி சட்டத்திற்குபுறம்பாக யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியான கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.