யானை அகிலாவின் ஆனந்த குளியல்
திருச்சிதிருவானைக்காவல் கோவிலில் உள்ள யானை குளிப்பதற்கு குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது இதில் சிறு குழந்தை போல் குளித்து கும்மாளமிட்ட யானை அகிலா
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் வளாகத்தில் புதிதாக யானை குளியல் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது
பஞ்சபூத தலங்களில் நீர்த் தலமாக விளங்குவது திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயில் ஆனது சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இத்திருக்கோயிலில் 19 வயதுடைய அகிலா என்ற பெண் யானை உள்ளது.கோவிலில் நடைபெறும் விசேஷங்களில் யானை பங்கேற்பது வழக்கம்.
இந்நிலையில் யானை குளிப்பதற்கு ஏதுவாக கோயில் வளாகத்திலுள்ள நாச்சியார் தோட்டம் என்ற இடத்தில் 20 க்கு 20 என்ற அளவில் சாய்வு தளத்துடன் கூடிய 6.அடி உயர குளியல் தொட்டி புதிதாக கட்டப்பட்டுள்ளது.
மின் மோட்டார் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு சாய்வு தளம் மூலம் தொட்டியில் இறங்கி யானைஅகிலா குதூகலத்துடன் குளித்தது.
யானை பெரிய உருவம் என்பதால் நின்று கொண்டும் படுத்துக்கொண்டும் குளிக்கும்வகையில் குளியல்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது
மேலும் யானை காலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக தற்போது இப்பகுதியில் நடைபாதை அமைக்கும் பணியும் பூச்செடிகள் பழ மரங்கள் நந்தவனம் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்