திருச்சி மாநகர் மாவட்டம், காட்டுர் பகுதிக்குழு சார்பில் அரியமங்கலத்தில் DYFI - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாம் மற்றும் இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் ரத்த தட்டுப்பாடுகள் ஏற்படுட்டுள்ள இந்நிலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பாக உக்கடை அரியமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்தனர்.
இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கிவைத்தார்.
இதையடுத்து இலவச ஆட்டோ ஆம்புலன்ஸ் சேவையையும் கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக
ராக் போர்ட் டைம்ஸ் லெட்சுமி நாரயணன், DYFl Ex மாநில துணை தலைவர் வெற்றி செல்வன், மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின், மாநகர் மாவட்ட தலைவர் S.சுரேஷ், மாவட்ட பொருளாளர் ஜெய்குமார், புதியதலைமுறை லெனின், சிபிஎம் பகுதி செயலாளர் மணிமாறன், கனல் கண்ணன் , SFl மோகன்,
காட்டூர் பகுதி செயலாளர் H.A. தீன் , மாவட்ட து.தலைவர் R. கிச்சான், . மாவட்ட நிர்வாகிகள் சேதுபதி பகுதி தலைவர் யுவராஜ், பகுதி து.தலைவர் சந்தோஷ், மற்றும் நிர்வாகிகள் ,முருகா, திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.