எலெக்ட்ரீஷியன் பிளம்பர் மோட்டார் தொழில் செய்பவர்கள் வராத காரணத்தினால் பொதுமக்கள் அவதி
தமிழகத்தில் 2வது அலை கொரோன நோய்தொற்று காரணமாக தமிழக அரசு ஊரடங்கு பிரபித்துள்ளது இந்நிலையில் அத்திவாசிய தேவையான காய்கறிகள் மருந்து மாத்திரைகள் குடிநீர் போன்றவை விற்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் தமிழக அரசு விதிமுறைகளுடன் அனுமதி அளித்துள்ளது ஆனால் தற்பொழுது வெயில் காலம் என்பதால் வீட்டில் உள்ள சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தினசரி பயன்படுத்தகூடிய மின் உபகரணங்கள் நீர் உபகரணங்கள் பழுதடைந்து உள்ளதால் எலெக்ட்ரீஷியன் பிளம்பர் மோட்டார் தொழில் செய்பவர்கள் வரமுடியாத காரணத்தால் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் சிரமத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதுவும் இந்த வெயிலில் ஃபேன் ஒடவில்லை தண்ணீர் வரவில்லை என்றால் அவர்கள் நிலை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் நிலை கிழே வந்து தண்ணீர் எடுக்க எவ்வளவு சிரமம் ஏற்படும் வயதானவர்கள் என்றால் அவர்கள் நிலை போன்ற பல சிரமங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது மேலும் சென்ற வருடம் கொரோனா முதல் அலை ஏற்பட்ட போது எலக்ட்ரீசியன் பிளம்பர் ரீவைண்ட்டர்ஸ் இவர்களது சங்க ஐடி கார்டு பயன்படுத்தி அவசர கால மின் பணிக்கு சென்றார்கள் ஆனால் தற்போதைய அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை எனவே திருச்சி மாவட்ட எலக்ட்ரீசியன் பிளம்பர் ரிவைண்டர்ஸ் நல சங்கத்தின். தலைவர்:
லாசர் ராஜேந்திரன், செயலாளர்: v.முருகேசன், மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் சார்பாக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர் இதுவும் அத்தியாசிய தேவை என்பதை முதல்வர் ஏற்றுகொண்டு. விதிமுறைகளுடன் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்