தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்டம் சார்பில் முப்பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கொரானா பேரிடர் கால அவசர இரத்ததான முகாம். நடை பெற்றது.
கொரானா தொற்று பரவலின் காரணமாக பலர் அச்சப்பட்டு இரத்ததானம் செய்வதற்கு முன்வராத காரணத்தால்
ரத்த தட்டுப்பாடு ஏற்பட்டு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டும் நோயாளிகளுக்கு தேவைப்படும்
தேவைக்கு ஏற்ப இரத்தம் கிடைப்பதில்லை.
இதன் காரணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருச்சி மாவட்டம் சார்பாக இரத்த தான முகாம் 30.5.2021
ஞாயிறு கிழமை காலை 08:00 மணி அளவில் திருச்சி வரகனேரி தவ்ஹீத் பள்ளிவாசலில் திருச்சி மாவட்ட
தலைவர் K.குலாம் தஸ்தகீர் தலைமையில் நடைபெற்றது.
இதில் ம TNTJ மாவட்ட செயலாளர் ஜாகிர் மாவட்ட பொருளாளர் முஹம்மது உசேன் மாவட்ட துணைத்
தலைவர் ரபீக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் இரத்த தானம் செய்பவர்களிடம் இரத்தவகை
கண்டறியப்பட்டு முகாமில் இரத்தங்களை சேகரித்தனர். ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட 153 நபர்கள் இரத்த
தானம் செய்தனர்.
அதை தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களும் பயன் பெறும் வகையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் கொராணா ஆலோசனை மற்றும் சேவை மையம் தொடங்கப்பட்டு கொராணா பாதிப்பில்
உள்ளானவர்களுக்கு உதவும் வகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொரானா கட்டுப்பாட்டு உதவி
மையம் திருச்சி வரகனேரி தவ்ஹீத் பள்ளிவாசலில் திறக்கப்பட்டது.
இம் மையத்தில் கொரானாவில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ மனை அழைத்து செல்வது,
நோய்குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், ஆக்சிஜன், ஆம்லென்ஸ் வசதி, தனிமை படுத்தி கொண்டவர்கள்
உணவு வழங்குதல், நோய் தொற்றில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஆறுதல், நோய்
எதிர்ப்பு சக்திக்கான கபசுர குடிநீர் வழங்குதல், கொரானா நோயால் இறந்தவர்களை அடக்கம் செய்தல், மருந்து
உபகரணங்கள் கிடைக்க வழிகாட்டுதல் உள்ளிட்ட பணிகள் இம் மையத்தில் மேற்கொள்ளப்படும்.
தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கொராணா கட்டுப்பாட்டு மையம் செயல் பட்டு
வருகிறது குறிப்பிடதக்கது.
இறுதியாக கொராணா கால கட்டத்தில் இரத்த தானம் அளித்த அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும்
TNTJ மாவட்ட தலைவர் K. குலாம் தஸ்தகீர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியுடனும் அரசு வழிகாட்டுதலின்
அடிப்படையிலும் முக கவசம் அணிந்து கலந்து கொண்டனர்.