திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாகநடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் லட்சத்தீவில் பெரும்பாண்மை
சமூகமாக வாழும் முஸ்லிம்களை அன்னியப்படுத்த முயற்சிக்கும்
பரபுல் கோடா படேல் அதிகாரியை
பா.ஜ.க. நடுவண் அரசு உடனடியாக
திரும்பி அழைத்திடு
என்ற கோரிக்கையை வலியுறுத்தியும்,
லட்சத்தீவு மக்களின் கலாச்சாரம்,
தனித்தன்மை பாதுகாத்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
துணை நிற்கும் என்ற முழக்கத்தோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக
சமூக இடைவெளியுடன் பதாகை ஏந்தி, லட்சத்தீவு மக்களுக்காக குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும்ஆண்டாண்டு காலமாக லட்சத்தீவு மக்கள் அவர்களின் கொள்கை கோட்பாடுபடி
முழு சுதந்திரத்துடன் வாழ்ந்து கொண்டு வருகின்றனர் அவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் வகையில் குண்டர் சட்டம் மாட்டு இரைச்சிக்கு தடை மதுபானக்திற்க்கு அனுமதி போன்றபல்வேறு சட்டங்களை போட்டு முஸ்லிம்களின் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு மதுபான விற்பனக்கு அனுமதி கொடுத்து முஸ்லிம்களை அடக்குமுறை படுத்த நினைக்கும் பரபுல் கோடா படேல் அதிகாரியை கண்டித்தும்
மத்திய அரசு இந்த அதிகாரியை கண்டித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர்:
கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் |தலைமை வகித்தார், மேற்கு தொகுதி அமைப்பாளர் கே.எம்.எஸ்.அல்துல் கபூர், வரவேற்புரையாற்றினார்,
மாநில மாணவர் அணி பொதுச் செயலாளர்: திருச்சி ஏ.எம்.எம்.அன்சர் அலி,
வடக்கு மாவட்டச் செயலாளர் எம்.எச். நிஜாமுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
மாவட்ட துணைத் தலைவர்:எச்.நூர் முஹம்மது, மாவட்ட இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் ஜி.எச்.ஹக்கீம், மாநில பொதுக்குழு உறுப்பினர் பா.சிராஜுதீன், 43வது வார்டு செயலாளர் கே.எம்.கே.பைஜுர் ரஹ்மான், 12வது வார்டு செயலாளர் ஏ.முஹம்மது ஷாகிர், திருவெறும்பூர் தொகுதி அமைப்பாளர் ஜெ.சையது முஸ்தபா, தொழிலாளர் அணி மாவட்ட துணைத் தலைவர் பி.அப்துல் சலாம்,
28 வது வார்டு தலைவர் இஜட்.ஜஹாங்கீர் பாஷா, காஜா நகர் ஷர்புதீன், பாலக்கரை கமால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டப் பொருளாளர் பி.எம்.ஹுமாயூன்
நன்றி கூறினார்.