எம்.பி.சி பட்டியலில் சேர்க்க மாவட்ட ஆட்சியரிடம் எம்.கே தியாகராஜ பாகவதர் ஒருங்கிணைப்பு குழு மனு அளித்தனர்
திருச்சி. மார்ச்,1: எம்.கே. தியாகராஜ பாகவதர் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில் மாலை அனிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதர் மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள ஏழிசை மன்னர் எம். கே. தியாகராஜ பாகவதர் திருவுருவ சிலைக்கு அவரது 116 வது பிறந்த நாளினை முன்னிட்டு அரசின் சார்பில மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
அப்போது எம்.கே தியாகராஜ பாகவதர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள விஷ்வகர்மா மக்களை மிகவும் பிற்படுத்தோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
வருடம் தோறும் செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்மா ஜெயந்தி தேசிய விடுமுறை தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.விஸ்வகர்மா என்பது அகில இந்திய அளவில் சாதிப் பெயராக உள்ளதால் மத்திய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் பயிற்சி பெறுகின்ற தொழிலாளர்களுக்கு பயிற்சி முடித்த தொழிலாளர் என்று மட்டுமே சான்றிதழ் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
இதில் மாநிலத் தலைவர் மாணிக்க விநாயகர்.மாநில செயலாளர் கார்த்திகேயன்.மாநில பொருளாளர் குமரவேல் என்கிற எழில் ஸ்ரீதர்,மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சுகுமார்,சட்ட ஆலோசகர் செந்தில் ஆறுமுகம்.முல்திட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்