வெள்ளாமை இயக்கத்தின் தலைமை அலுவலகம் அமைச்சர் திறந்து வைத்தார்
திருச்சி, ஜன 4: திருச்சியில் வெள்ளாமை இயக்கத்தின் சார்பில் பல்வேறு பணிகள் தொண்டுகள் செய்து வருகின்றனர்.
மேலும் வெள்ளாமை இயக்கத்தின் சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் வெள்ளாமை இயக்கத்தின் தலைவர் ஜான் தலைமையில்,திருச்சி. வரகனேரி அல்மாஸ் காம்ப்ளக்ஸில் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது,
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் வெள்ளாமை இயக்கத்தின் செயலாளர் மரிய அகிலராஜன், அமைப்பாளர். அந்தோணி, இணை ஒருங்கிணைப்பாளர், ஜூலியா மேரி, வேளாங்கன்னி, சட்ட ஆலோசகர்கள் செல்லம்,ராஜ்குமார், .லியோராஜ், அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,
இதில் திமுக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்


