ரோபோட்டிக் மூட்டு மாற்று சிகிச்சை

மணப்பாறை ஶ்ரீகுமரன் மருத்துவமனையில் அதிநவீன ரோபோட்டிக் மூட்டு மாற்று சிகிச்சை பிரிவு துவக்கம்

 மணப்பாறை ஶ்ரீ குமரன் மருத்துவமனையில் அதிநவீன ரோபோட்டிக் மூட்டு மாற்று சிகிச்சை பிரிவு துவக்கம்


திருச்சி, டிச 19:                                          திருச்சி மாவட்டம்  மணப்பாறை - விராலிமலை சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் மருத்துவமனையின் சார்பில் அதிநவீன ரோபோடிக் பிரிவு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு துவக்க விழா, திருச்சியில்  தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. 


ஸ்ரீ குமரன் மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயகுமார் வரவேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு,  அதிநவீன ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவ உபகரணத்தை திறந்து வைத்து பேசினார். 


அதில், திருச்சியில் உள்ள நகராட்சிகளிலேயே மணப்பாறையில் உயர்தர சிகிச்சைகள் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இப்போது ஸ்ரீ குமரன் மருத்துவமனையும் இணைந்துள்ளது. இருதய அறுவை சிகிச்சைக்கு அதிக செலவாகிறது. அதற்கடுத்து எலும்பில் ஏற்படும் பிரச்சனைக்கு அதிக செலவாகிறது. தற்போது இந்த அதிநவீன ரோபோட்டிக் சிகிச்சை மருத்துவ முறையின் மூலம் மணப்பாறை மக்களுக்கு எலும்பு பிரச்சனைகளுக்கான துல்லியமான மருத்துவத்தை வழங்க முடியும் என்றார்.


இதைத் தொடர்ந்து (ஜான்சன் அண்ட் ஜான் சன்) மெட்டெக் நிறுவன தேசிய விற்பனை இயக்குனர் மணிகண்டன் சிகிச்சை முறை குறித்து விரிவாக பேசினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், ஸ்ரீகுமரன் மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயகுமார், மருத்துவர்கள் பழனியப்பன், ஜெயப்பிரியா, ரேணுகாதேவி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். 


இந்நிகழ்ச்சியில்  மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form