தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் மனித உரிமை விழிப்புணர்வு.
சேலம், டிச.12: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைதினத்தை முன்னிட்டுதமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்.
அந்த வகையில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியில் உள்ள அரிமா மண்டபத்தில் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில தலைவர் இளங்கோ. தலைமையில் மனித உரிமை விழிப்புணர்வு பேரணி மற்றும் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம. புதிய பொறுப்பாளர்கள் அடையாள அட்டை வழங்கும் விழா, மற்றும் மரக்கன்று நடுதல் ஆகிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாநில இணைச் செயலாளர்கள் பழனிவேல். ஷேக் தாவுத்,மாநில இயக்குனர் சந்திரசேகர்,மண்டல செயலாளர்கள் நல்லுசாமி, வீராச்சாமி,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக காவல்துறை ஆய்வாளர் விதுன் குமார்,அரிமா சங்க தலைவர் சிரஞ்சீவி,டாக்டர் மணிவண்ணன்,
இலட்சிய குடும்பம் தங்கவேல்.வழக்கறிஞர் முருகானந்தம்.கட்டுமான தொழிலாளர் சங்க மாநில தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் மாநில இணைச்செயலாளர் அங்கமுத்து வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில்மனித உரிமை சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மேலும் மனித உரிமைகள் என்னென்ன என்பதை பற்றியும் .இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது மேலும் புதிய பொறுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து மரக்கன்றுகளும் நடப்பட்டது.
இந்த விழாவில் தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய,பகுதி, உள்ளிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆண்கள் பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்