மருத்துவர்களை மாவட்ட ஆட்சியர்கள் அவமரியாதை செய்கின்றனர்,

ஆய்வுக் கூட்டங்களில் மருத்துவர்களை மாவட்ட ஆட்சியர்கள் அவமரியாதை செய்கின்றனர், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை

 ஆய்வுக் கூட்டங்களில் மருத்துவர்களை மாவட்ட ஆட்சியர்கள் அவமரியாதை செய்கின்றனர், தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை - மகப்பேறு மருத்துவ சங்கங்கள் வேதனை.


திருச்சி, நவ,27:                                திருச்சியில் இந்திய மருத்துவ சங்கம் அலுவலகத்தில் தமிழ்நாடு மகப்பேறு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில்... பிரசவத்தின்போது தாய்,சேய் இருவரையும் காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பில் மகப்பேறு மருத்துவர்கள் இருக்கும் சூழலில் மருத்துவர்களின் மன அழுத்தம் என்பது அதிகமாக உள்ளது.

அதேநேரம் மருத்துவர்களின் சிறிய அர்ப்பணிப்பால் மகப்பேறு கால இறப்பு தமிழகத்தில் குறைந்துள்ளது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் மகப்பேறு மருத்துவர்களின் மேல் அதிகமான அழுத்தம் கொடுக்கப்படுகிறது.


அரசு மருத்துவமனைகளில் போதிய கட்டமைப்புகள் இல்லாமல் மருத்துவர்கள் மிகுந்த சிரமப்பட்டு மகப்பேறு சிகிச்சை அளிக்கும் நிலையில் மகப்பேறு கால இறப்பை குறைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம் என்ற பெயரில் அலைக்கழிப்பதாகவும், திருச்சி மற்றும் கரூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மகப்பேறு மருத்துவர்களை ஆட்சியர்கள் இழிவாக பேசுவதும், அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொள்கின்றனர்.

இது மட்டுமன்றி ஆய்வுக்கூட்டத்தில் மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்படும் என்று மிரட்டப்படுவதும், இரவு 11 மணி வரை ஆய்வு கூட்டம் நடத்துவது மற்றும் மருத்துவர்களை கொலையாளிகள் போல பேசுதல் மற்றும் நோயாளிகளின் மருத்துவ சீட்டை தூக்கி எறிந்து ஆவேசமாக பேசுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பேசினர்.

மேலும் தாய் சேய் நலன் பேணும் மகப்பேறு மருத்துவர்களுக்கு மரியாதை அளிக்கப்பட வேண்டும் அதேநேரம் தமிழக அரசும், மருத்துவமனை நிர்வாகமும் மகப்பேறு மருத்துவர் பற்றி ஊடகங்களில் தவறாக பேசுவது எதிர்கால நலனுக்கு கேடு விளைவிக்கும் அதே நேரம் மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கும் மனநிலையை மாற்றிக்கொண்டு மருத்துவர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் மரணம் குறித்து தணிக்கையின்போது ஏற்படும் இடர்களை களைய வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும், மேலும் ஆய்வு மற்றும் தணிக்கை குழுவில் அந்தந்த பகுதியில் மகப்பேறு சங்கங்களின் தலைவர் மற்றும் மூத்த மருத்துவர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசையும், சுகாதாரத் துறையையும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்.




Post a Comment

Previous Post Next Post

Contact Form