ஏழைகளுக்கு செய்கிறவன் இறைவனுக்கு செய்கிறான் என்ற சொல்லுக்கினங்க
மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மகிழ்வித்த அறக்கட்டளை நிர்வாகிகள்.
திருச்சி, அக் 28: நுகர்வோர் நல சங்கம் மற்றும் புதிய பாதை அறக்கட்டளை சார்பாக ஏழைகளுக்கு செய்கிறவன் இறைவனுக்கு செய்கிறான் என்ற சொல்லுக்கினங்க
தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆவூர் பெரியநாயகி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் இல்லத்தில் இன்று 50 நபர்களுக்கு இனிப்பு வகைகள் கார வகைகள், கேக் மற்றும் தேனீர் கொடுத்து அவர்களுடன் கலந்துரையாடினர்
இதில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடன் பேசி மகிழ்ந்தனர்
இந்நிகழ்வில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் தலைவர் கோவிந்தராஜன்,புதிய பாதை அறக்கட்டளையின் அறங்காவலர்கள் ஆர்ம்ஸ்ட்ராங் ராபி, அக்குபஞ்சர் மருத்துவர் அருணாச்சலம் மற்றும் முகமது ஷரிப், பிலோமினா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்