வெண்கல கும்பா குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி
திருச்சி, அக் 17: திருச்சிராப்பள்ளி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இருபபத்தைந்தாயிரம் நூல்கள் கொண்ட இலவச நூலகமும், பசிப்பிணி போக்க அன்னதானமும், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகமும் இல்லத்தின் முகப்பிலேயே வைத்துள்ளார்கள். மேலும் உரிமை கோரப்படாத அனாதை பிணங்களை உரிய மரியாதை உடன் நல்லடக்கம் செய்யும் மனிதநேய பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் வெண்கல கும்பா உண் கலண் குறித்து பேசுகையில், நவீனத்தின் தாக்குதலால் பல்வேறு அடையாளங்களை இழந்து உள்ளோம் நாளுக்கு நாள் அழிந்தும் மாற்றம் கண்டும் வரும் புலங்கு பொருட்களையும் உரிய முறையில் அடையாளம் கண்டு ஆவணப்படுத்தி வருகிறோம். புழங்குப் பொருட்களின் தொன்மை சிறப்புகள், தொழில் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிவது, புழங்கு பொருட்களை ஆவணப்படுத்துவது பண்பாடுகளையும் கலாச்சாரத்தையும் வெளி கொணர்வதாக அமைகிறது. அதில் கும்பா உண்கலமும் ஒன்று
கும்பா அடிசிறுத்து வாய் அகன்று அமைந்த உண்கலம் – வெண்கலத்தால் ஆனது. நம் முன்னோர்கள் சமைப்பதற்கு மண் பாண்டங்கள், வெங்கலம், வெள்ளீயம் பூசப்பட்ட பித்தளை பாத்திரங்களை தான் அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.
வெண்கலத்தில் சமைப்பதால் உடல் சோர்வுகள் நீங்கும். இதில் சமைக்கும் உணவுகள் வயிற்றுக்கு பிரச்சனை வராது. வெங்கல பாத்திரத்தில் சமைத்த உணவுகள் சாப்பிடும்போது நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
நெய் மற்றும் புளிப்புச் சுவையுடைய பொருட்களை வெண்கலப் பாத்திரங்களில் தவிர்க்க வேண்டும், உபயோகப்படுத்திய பின் நன்றாக கழுவி ஈரத்தை வெயிலில் காய வைக்க வேண்டும். ஏனெனில், ஈரத்தன்மையால் கழிம்பு போன்ற படலம் ஏற்பட்டு உணவின் தன்மையை மாற்றி விடும்.
வெண்கல பாத்திரங்களில் சூடான உணவுகளை வைப்பதால் பலமணிநேரம் சுடு ஆறாமல் இருக்கும். மருத்துவ குணங்களை கொண்ட இப்பாத்திரங்களை பயன்படுத்தியதால் தான் நம் முன்னோர்கள் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்துள்ளனர். நவநாகரீக உலகில் இப்பொருள் பயன்பாடு வழக்கொழிந்து விட்டது. ஒரு காலத்தில் மணமகள் வீட்டார் திருமண சீர் வரிசையில் "வெண்கல கும்பா" பிரதான பொருட்களாக வழங்குவது இருந்துள்ளது. வெங்கல கும்பாவில் பழைய சோறு போட்டு கூட தேங்காய் துவையல், பருப்பு துவையல், மாங்காய் ஊறுகாய் சேர்த்தால் ருசியாக இருக்கும். பழைய சோறு சாப்பிட்ட பின்னர் கும்பாவில் இருக்கும் நீராகத்தை பருகினால் தனி ருசிதான். நம் முன்னோர்கள் சமைப்பதற்கு மண் பாண்டங்கள், வெங்கலம், வெள்ளீயம் பூசப்பட்ட பித்தளை பாத்திரங்களை தான் அதிகமாக பயன்படுத்தி வந்தனர்.
வெண்கலத்தில் சமைப்பதால் உடல் சோர்வுகள் நீங்கும். இதில் சமைக்கும் உணவுகள் வயிற்றுக்கு பிரச்சனை வராது. உணவுக் கலன்கள் ஆனது, மண் சட்டி, பித்தளை, வெண்கலம், வெள்ளி, இரும்பு, அலுமினியம், எவர் சில்வர், நான்ஸ்டிக் என பல்வேறு உலோகங்களில் வெளிவந்தாலும் பழங்காலத்தில் புழங்கு பொருட்கள் இன்றளவும் போற்றக்கூடியதாக தான் உள்ளது என்றார்.
திருச்சி பிஷப் ஹீபர் தன்னாட்சி கல்லூரி. அரிஸ்டோ வசந்தகுமார், முதுகலை வரலாற்று துறை மாணவர்கள் கரோலின் ஷைனி மனோன்மணி, கௌசல்யா, கெவின் ஜோஸ்வா, மெர்வின், சிஷ்மா சீலு, ரம்யா, அர்ஜித் ராய் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்
