ஹேம் ரேடியோ என்கிற அமெச்சூர் ரேடியோ நூலாசிரியருக்கு விருது!
திருச்சி, செப்,26: திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலக பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள் கண்காட்சி மூன்று நாட்கள் திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார் தலைமையில், செயலர் குணசேகரன், பொருளாளர் அப்துல் அஜீஸ், ஒருங்கிணைப்பாளர்கள் பாண்டியன், முகமது சுபேர், சந்திரசேகரன், கமலக்கண்ணன் அரிஸ்டோ முன்னிலையில் பத்மஸ்ரீ சுப்புராமன் கண்காட்சியை திறந்து வைத்து, ஹேம் ரேடியோ என்கிற அமெச்சூர் ரேடியோ நூலாசிரியர் ராஜ்குமாருக்கு பாரம்பரிய காவலர் விருதினை வழங்கினார்.