திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
திருச்சி.செப்.2: அதிமுக கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க.திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி. தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர்கள் எஸ்.வளர்மதி, ஆர்.மனோகரன், முன்னாள் அமைச்சர் பூனாட்சி, கழக அம்மா பேரவை இணை செயலாளர் செல்வராசு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ், மாவட்ட கழக துணை செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், நகர, ஒன்றிய, பேரூராட்சி மற்றும் பகுதி கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.