இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை.அளிப்பதில் தாமதப்படுத்தக் கூடாது.
திருச்சி ஆகஸ்ட் 29: திருச்சி அரசு மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்கு 24×7 மருத்துவம் வழங்குக கோரிக்கை.
திருச்சி மாவட்டத்தின் கீழ் உள்ள ஆறு தாலுக்காவுக்கான தலைமை மருத்துவமனையாக அண்ணல் காந்தி அரசு மருத்துவமனை உள்ளது.
இந்த மருத்துவமனையில் சமீப காலமாக இருதயம்(heart disease) சம்பந்தமான பிரச்சனைகளுக்கு வாரம் இரு முறை மட்டும்தான் மருத்துவம் பார்க்கப்படுகிறது.
அதாவது செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய இந்த இரு நாட்களில் 200க்கும் மேற்பட்ட இருதய நோயாளிகள் வந்து மருத்துவம் பார்த்து செல்கின்றனர். அதற்கு ஏற்ப போதுமான இட வசதி, போதுமான மருத்துவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது
அதேபோல வாரம் இரண்டு நாள் மட்டுமே இருதய நோயாளிகளை பார்க்கும்போது மற்ற நாட்களில் ஏற்படும் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்து கொள்ளவும், ஆலோசனை கேட்கவும் வழியில்லாமல் உள்ளது. இருதய சிகிச்சையானது மனிதனின் அடிப்படைத் தேவையான உயிர் பாதுகாப்புடன் தொடர்புடையது. ஆனால் வாரத்தில் இரண்டு நாட்கள் என்பது இருதயா நோயளிகளுக்கு வருத்தம் அளிக்கிறது,
எனவே இருதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தமாதம் படுத்தாமல் தினசரி ஆலோசனை வழங்கவும், சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்கள் நலனின் அக்கறை செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். என்று
திருச்சி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் மாவட்ட செயலாளர் செழியன் கோரிக்கை விடுத்துள்ளார்