சிவசக்தி அகாடமி, கேர் காலேஜ், மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற தலைப்பில் கேர் காலேஜில் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலக சாதனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ் பதக்கம் மற்றும் கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சிகள் சிவ சக்தியை அகாடமி நிறுவனர் திருமதி .மீனா சுரேஷ், மாநகராட்சி மேயர் திரு .அன்பழகன், அஸ்வின் குடும்பம் உரிமையாளர் திரு கே ஆர் வி கணேசன், மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர்
டாக்டர்.திரு .செல்வம் அவர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர், இந்த உலக சாதனை நிகழ்ச்சி ஆனது ஜீனியஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டது.