தமிழக முதலமைச்சர் உத்தரவின்பேரில், போதைப்பொருள்கள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்க இளைஞர்களின் நலனை காக்க "போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி" திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்றது.
தமிழக முதல்வர் "போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு"- யை உருவாக்கும் சீரிய நோக்கில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியர்களுக்கிடையே "போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி" ஏற்றிடுமாறு உத்தரவிட்டதன்பேரில், திருச்சி மாநகரத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் "போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி"யை எடுக்க திருச்சி மாநகர காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி, இன்று 12.08.2024-ந்தேதி காலை தமிழக முதலமைச்சர் சென்னை பல்கலைக்கழகத்தில் பங்கு பெற்ற நிகழ்ச்சியானது காணொளி வாயிலாக போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க உறுதிமொழியை தமிழக முதல்வர் வாசித்தபோது, அவர்களுடன் இணைந்து திருச்சி மாநகரத்தில் மாநகர காவல்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 91 பள்ளிகள் மற்றும் 11 கல்லூரிகளில் சுமார் 26000 மாணாக்கர்கள் போதை பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.
மேலும், வயலூர்ரோட்டில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரி கூட்ட அரங்கில் நடந்த அரசு விழாவில் திருச்சி மாநகர காவல் ஆணையர்
காமினி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்,
மாநகர மேயர் அன்பழகன, ஸ்ரீரங்கம் மற்றும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் உடன் சுமார் 1000 மாணாக்கர்கள் இணைந்து போதைப்பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள்.
இவ்விழாவில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் உரையாற்றுகையில்,
இன்று தமிழக முதல்வர் அவர்கள் மாணவ செல்வங்களுக்கிடையே போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டும், போதை பொருள்கள் விற்பனையை தடுத்த காவல் அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கியுள்ளார்கள். மாணவர்கள் ஆகிய நீங்கள் தமிழகத்தின் வருங்கால தூண்கள், உங்களில் பலர் மாவட்ட ஆட்சியராகவோ, மேயராகவோ, காவல் ஆணையராகவோ வர உள்ளீர்கள். தமிழ்நாட்டின் சொத்துக்களாகிய தமிழ் சமுதாயத்தை சேர்ந்த நீங்கள் போதைக்கு அடிமையாகக்கூடாது என்பதில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உறுதியாக உள்ளார்கள். நீங்கள் யாரும் போதைப்பொருள்களை பயன்படுத்த கூடாது, வேறு யாரவது பயன்படுத்தினால், அவரை நல்வழிபடுத்தும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. திருச்சி மாநகரத்தில் போதை பொருள்கள் விற்பனை செய்வோர்கள் மீது திருச்சி மாநகர காவல்துறை சார்பில் கடுமையான நடவடிக்கை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் போதை பொருள்கள் விற்பனை குறித்து தகவல் தரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு நீங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். மாணவ செல்வங்களாகிய உங்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் போதைப்பொருள்களின் விற்பனை முழுமையாக தடுக்க முடியும். போதைப்பொருள்கள் பயன்பாட்டை தவிர்த்து மாநிலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும், மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு என்னுடைய மனமார்த்த வாழ்த்துக்கள் என கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

