திருச்சி விமான நிலையம் வந்த,அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு.
திருச்சி. ஆகஸ்ட்.18: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள பளுவஞ்சியைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகர். அஇஅதிமுக மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ள இவரது மகன் காதணிவிழா மற்றும் மகளின் நிச்சயதார்த்த விழா இன்று பளுவஞ்சியில் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள அஇஅதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு காலை 7:00 மணி அளவில் வருகை தந்தார்.
அதிமுக திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.திருச்சி மாவட்ட கழக செயலாளர்கள் குமார், பரஞ்சோதி, சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, சிவபதி, அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மனோகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, பளுவஞ்சியில் நடைபெறும் முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகர் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக சாலை மார்க்கமாக மணப்பாறை செல்கிறார்.