சிறைவாசிகள் மறுவாழ்விற்காக புதிய பெட்ரோல் பேங்க் திருச்சியில் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.
திருச்சிராப்பள்ளி மகளிர் தனிச்சிறையின் வளாகத்தின் முன்புறம் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து சிறைவாசிகளின் மறுவாழ்வு நோக்கத்திற்காக முற்றிலும் சிறைவாசிகளை ஊழியர்களாக கொண்ட Freedom புதிய பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையத்தை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் சரவணன்,சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் தலைமை இயக்குநர் முனைவர் மகேஷ்வர் தயாள் திருச்சி சரக சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துணைத் தலைவர் (பொ) முனைவர் பழனி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மாநில தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அண்ணாதுரை, திருச்சி மகளிர் தனிச்சிறை கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிர்வாகிகள், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.