புதிய பேருந்துகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிட் திருச்சி மண்டலம் சார்பாக பிஎஸ் 5 புதிய பேருந்துகள் துவக்க விழா திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்திருச்சியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் "பிஎஸ் 5" 15 புதிய பேருந்துகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிட் திருச்சி மண்டலம் சார்பாக பிஎஸ் 5 புதிய பேருந்துகள் துவக்க விழா திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  

இந்த புதிய பேருந்துகள் துறையூரில் இருந்து திருச்சி வழியாக கோயம்புத்தூர் செல்லும் பேருந்து மணப்பாறையில் இருந்து திருச்சி வழியாக கோயம்புத்தூர் செல்லும் பேருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் பேருந்து துவரங்குறிச்சியில் இருந்து திருச்சி வழியாக கரூர் கோயம்புத்தூர் செல்லும் பேருந்து உப்பிலியாபுரத்தில் இருந்து திருச்சி வழியாக மதுரை செல்லும் பேருந்து உள்ளிட்ட மொத்தம் 15 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலெக்டர் பிரதீப் குமார், மேயர் அன்பழகன் மாநகராட்சி ஆணையர் சரவணன், தொழிலாளர் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் குணசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form