மேஜர் சரவணன் 25வது நினைவு தினம்

 மேஜர் சரவணன் 25வது நினைவு தினம் நேசன் ஃபஸ்ட் கிளப் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டதுமேஜர் சரவணன் 25வது நினைவு தினம் நேசன் ஃபஸ்ட் கிளப் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

1999 ம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் 4 எதிரிகளை நேருக்கு நேர் சண்டையிட்டு அவர்களது முகாம்களை தரைமட்டமாக்கிவிட்டு அப்போரின் வெற்றிக்கு வித்திட்டு முதல் ராணுவ அதிகாரியாக வீரமரணமடைந்த “ஹீரோ ஆஃப் பாட்டாலிக்” மேஜர் சரவணன், வீர் சக்ரா அவர்களது 25ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி,ஜான் வேஸ்ட்ரி பள்ளி ரவுண்டானம் அருகே உள்ள அவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நேசன் ஃபஸ்ட் கிளப் சார்பில் நடைபெற்றது.


இதில் சிறப்பு அழைப்பாளராக எஸ்பி கமாண்டோ ஃபஸ்ட் பட்டாலியன் ஆனந்தன் கலந்து கொண்டு ராணுவ மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தினார். மேலும் கல்லூரியின் என். எஸ்.எஸ் என்.சி.சி.மாணவ மாணவியர்கள் அனைவரும் மேஜர் சரவணன் தியாகத்தை நினைவு கூர்ந்து நாட்டை பாதுகாத்திடவும் நமது நாட்டின் மக்களை பாதுகாக்கவும் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

எப்பொழுதும் பிறருக்கு உதவிட தியாக உணர்வுடன் செயல்பட வேண்டும்.தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் எதையும் முயற்சிக்க வேண்டும்,என்று அறிவுரை கூறினார்.அதனைத் தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இதில் கல்லூரி முதல்வர் பிச்சைமணி மற்றும் துணை முதல்வர்கள், புல முதன்மையாளர், கல்லூரியின் தேர்வு நெறியாளர்,கல்லூரி பேராசிரியர்கள் என்சிசி மாணவ மாணவிகள்,மற்றும் செய்தி தொடர்பாளர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form