மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நீர்மோர், தண்ணீர் பந்தல், திறந்துவைத்து தர்பூசணி பழங்கள் வழங்கினர்

 Trending and Earningதிருச்சி கிழக்கு மாவட்டம் பூக்கொல்லை, கிளை, 18 வது வார்டு, மனிதநேய மக்கள் கட்சி சார்பாக நீர்மோர், தண்ணீர் பந்தல், திறந்துவைத்து தர்பூசணி பழங்கள் வழங்கினர்.


கடுமையான வெயில் காலம் என்பதால், பொது மக்களுக்காக கிளைத் தலைவர் பாரூக் பாஷா தலைமையில் மாவட்ட துணை தலைவர் சையது முஸ்தபா முன்னிலையில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பல வகைகளும் வழங்கினார்.

இதில் கிளை பொருளாளர் நிஜாமுதீன், செயலாளர் சாதிக் அலி,ஜாபர் அலி, சாகுல் ஹமீது, மற்றும் கிளையின் துணை அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form