தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் பயிற்சி முகாம் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது
இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான ஹஜ் செல்லும் ஹாஜிகளுக்கான
வழிகாட்டி பயற்சி முகம் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் நடைபெற்றது,
இதில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான. அப்துல் சமது கலந்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில் திருச்சி,அரியலூர், பெரம்பலூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஹஜ் செல்லும் பணிகளுக்கு பயிற்சிகள் நடைபெற்றது,
தமிழ்நாடு அரசு இதற்கான பணிகளை சிறப்பாக செய்திருக்கிறது வரக்கூடிய 26 ஆம் தேதி முதல் விமானம் புறப்பட இருக்கிறது ஜூலை மாதம் ஒன்பதாம் தேதி வரை விமானங்களில் ஹஜிகள் மக்காவை நோக்கி செல்ல இருக்கிறார்கள் அவர்களுக்கு பணிவிடை செய்வதற்கான தன்னார்வலர்கள் அதேபோல் ஹஜ் கமிட்டி மூலமாக ஏற்பாடு செய்யப்பட்ட தொண்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்,
இவர்களுக்கு தேவையான ஏற்பாட்டினை ஹஜ் கமிட்டியில் இருக்கக்கூடிய உதவியாளர்கள் இணைந்து ஹஜ் பயணங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருவார்கள்,
இந்த வருடம் ஹஜ் கமிட்டியில் 5630 பேர் இந்த வருடம் போவதற்கு தயாராக இருக்கிறார்கள்,இது அதிகரிக்கவும் செய்யலாம்.
இதில் பெண்களும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர்.
அரசு சலுகைகள்,மானியங்கள் எப்போதும் போல வழங்கப்படுகிறது இதில் எந்த பிரச்சினையும் இல்லை.ஒரு ஹஜ் பையனிக்கு 3 1/2 லட்சம் வரை செலவாகிறது,மானியம் 25 ஆயிரம் வழங்கப்படுகிறது,
கடந்த வரும் 4033 நபர்கள் தமிழ்நாட்டில் இருந்து ஹஜ் செய்தார்கள்,
புதிதாக ஹஜ் செல்லக் கூடியவர்களுக்கு இந்த பயிற்சி முகாமில் மக்காவில் அவர்கள் செய்யக்கூடிய கடமைகள் மதினாவில் செய்யக்கூடிய கடமைகள்.என்னன என்பதையும் அதற்கான பயிற்சிகளை பத்தாண்டு 15 ஆண்டுகள் இதற்காக பயிற்சி அளிக்கக்கூடிய பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது.மேலும் ஹஜ் உம்ரா வழிகாட்டி புத்தகமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதில் ஹஜ் பயணிகள் 34 நாட்கள் அவர்கள் அங்கு இருப்பார்கள் அதன் பிறகு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவித்தார்.




