சந்தனக்கூடு உரூஸ்

 லால்குடி ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா சந்தனக்கூடு உரூஸ்லால்குடி ஹஸ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா தர்கா சந்தனக்கூடு உரூஸ்


    திருச்சி மாவட்டம் லால்குடி கஸ்பா சிறுதையூரில் அடங்கி.நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து இன்றைய நாளது வரையில் பற்பல அற்புதங்களும் மகிமைகளும் நடைபெற காரணமாய் விளங்குகின்ற ஹஜ்ரத் ருஸ்தும் ஷஹீத் அவுலியா அவர்களின் சந்தனக்கூடு உரூஸ் விழா வரும் (25- 4 2024) தேதி வியாழக்கிழமை அன்று ஷவ்வல் மாதம் பிறை 15 இரவு அன்று நடைபெறும். அது சமயம் அனைத்து சமுதாயத்தினரும் இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு வருகை தந்து பாத்திஹா மற்றும் நற்காரியங்களில் கலந்து கொண்டு பெற்று நன்மை அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதற்கு முதல்நாள் புதன்கிழமை மாலை துருபத் நிகழ்வு நடைபெறும். வியாழக்கிழமை இரவு லால்குடி மேல விதி ஆசூர்கானாவில் இருந்து சுமார் 11.00 மணி அளவில் மின் மற்றும் மலர் அலங்காரத்துடன்



சந்தனக்கூடு ஊர்வலமாக புறப்பட்டு சிறுதையூரில் உள்ள தர்காவில்உள்ள ரௌலா ஷரீஃபுக்கு சென்று சந்தனம் பூசப்படும். அன்று இரவு மவுளூது ஓதப்படும்.விழாவில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும்.இந்த விழாவிற்கு வருடா வருடம் வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களிலிருந்து இஸ்லாமியர்கள் உள்பட அனைத்து சமுதாயத்தினரும் கலந்து கொண்டு சிறப்பு செய்கின்றனர். அதேபோல் இந்த வருடமும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு லால்குடி ஜாமியா பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தார்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. விழாவிற்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளும் ஜமாத்தார்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பில் செய்து வருகின்றனர்...sathakath ali

 9787060725.

Post a Comment

Previous Post Next Post

Contact Form