திருச்சியில் சுயேச்சை பெண் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
திருச்சி, மார்ச், 20: திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த கவிதா செல்வம் பெண் சுயேச்சை வேட்பாளர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்ய வந்தார் அப்போது அவருக்கு சமூக ஆர்வலர்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில்வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மேலும் தனது தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் பகுதியில் பல்வேறு பணிகள் நடைபெறாமல் உள்ளதாலும் இப்பணிகள் சம்பந்தமாக பலமுறை புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து, தனது பகுதிக்கு வேண்டிய வசதிகளை செய்து தருவதற்கு தான் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார்.