1027வது சந்தனக்கூடு

 திருச்சி நத்தர்ஷா தர்கா 1027 வது சந்தனக்கூடு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது,


திருச்சி, மார்ச்.26:                                     தமிழக தர்காக்களில் புகழ் பெற்றதர்க்காக்களில் ஒன்றான திருச்சி தப்லே ஆலம் பாதுஷா நத்தர்ஷா தர்க்கா சந்தனம் பூசும் வைபோகம் ஆண்டுதோறும் நடைபெற்று வருவது வழக்கம் அந்த வகையில் இந்த வருடத்தின் 1027வது சந்தனக்கூடு விழா.தலைமை அறங்காவலர் அல்லா பாக்ஸ்,பொது அறங்காவலர் சலாவுதீன் தலைமையில் நடைபெற்றது,


இதில் தர்காவின் சதர் கலீஃபா சையத் ஹாயாத் கலந்தர் என்கிற சாதாத்,சதர் கலீஃபா சையதுபசீருத்தீன், பரம்பரை ஆஃரிப்,தர்கா பங்காளிகள், ஹிலால், பிலால், வம்சாவழி பங்காளிகள்,ஆகியோர் பங்கேற்றனர்,


இந்த விழாவில், சந்தனகூடு எடுத்து பல்வேறு வீதிகள், தெருக்கள், வழியாக சென்று இறுதியாக, தர்காவை வந்தடைந்து அங்கு சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது,


இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் பொதுமக்கள் உட்பட   விழாவில் கலந்து கொண்டனர் மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உள்ளிட்ட அனைவர்களுக்கும் விழா கமிட்டி சார்பில் சந்தனம் வழங்கி சிறப்பித்தனர்,

Post a Comment

Previous Post Next Post

Contact Form