திருச்சியில் வெள்ளாமை இயக்கம் சார்பில் உரிமைக்கான போராட்டம் நடைபெற்றது
திருச்சி, பிப், 18: வெள்ளாமை இயக்கம் சார்பில்சிறுபான்மையினரில் பெரும்பான்மையினராக இருக்கும் தமிழக கிறித்தவ பறையர்களுக்கு உள் இட ஒதுக்கீடு மற்றும் அரசியலில் பங்கு கேட்டு உரிமைக்கான போராட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது,
இதில் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் தமிமுன் அன்சாரி,விடுதலைப் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் கே எம் சரீப் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்,
போராட்டத்தின் கோரிக்கையாக, கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல்,கிறிஸ்தவ நிறுவனங்கள், உள்ளிட்வைகளில் கிறித்தவ பரையர்களுக்கு என்று ஒதுக்கிடு வழங்க வேண்டும்
தமிழ்நாட்டிலுள்ள மேற்கண்ட சமூக அநீதிகளை உடனடியாக களைய தமிழக முதல்வர் அவர்களுக்கு வெள்ளாமை இயக்கம் கேட்டுக்கொள்கிறோம். என்ற தீர்மானத்தை வலியுருத்தி கூறினர்,
இந்த போராட்டத்தில் தலைவர் ஜான், துணைத்தலைவர் லீயோராஜ்,செயலாளர் ஆரோக்கியநாதன், அமைப்பாளர் அந்தோணி,துணைச் செயலாளர் மரியா அகிலா ராஜன்,தலைமை சட்ட ஆலோசகர் ஆரோக்கியதாஸ்,வழக்கறிஞர் அணி செயலாளர் ஆண்டனி பிரபாகரன்,அலெக்ஸாண்டர்,மகளிர் அணி தலைவி சுசீலா உட்பட பலர் கலந்து கொண்டனர்

