பள்ளி மாணவர்களுக்கு கையெழுத்துப் போட்டி
திருச்சி, பிப்.18: திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி மைதானத்தில் பதினாறாம் ஆண்டு குடியரசு தின கையெழுத்து போட்டி நடந்தது. இதில் திருச்சி மாவட்டம் முழுவதும் இருந்து 60 பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியினை திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். துளசி பார்மசி சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதன் நிர்வாக இயக்குனர்கள் ராமகிருஷ்ணன், ராதா கிருஷ்ணன், பசுபதி, சீதா ராமகிருஷ்ணன், பத்மாவதி ராஜேந்திரன், அஜீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கையெழுத்து போட்டியினை திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய போது எடுத்த படம்.