தூய்மை பணியாளர்களுக்கு வழங்கும் உணவு குப்பை வண்டியில் .
திருச்சி, ஜன,20: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகள் முடிவடைந்து அதன் துவக்க விழா நடைபெற உள்ள நிலையில் கோயில்களிள் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்து வருகிறார் அந்த வகையில் திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் திருக்கோவிலுக்கு 20/1/2024 சாமி தரிசனம் செய்ய திருச்சி விமான நிலையம் வந்து அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் அருகே உள்ள யாத்திரி நிவாஸ் எதிரே உள்ள காலி இடத்தில் வந்து இறங்கி அங்கிருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல உள்ளார்
இதற்காக அந்த இடத்தை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் இவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 19/11/2024 அன்று ஸ்ரீரங்கம் அம்மா உணவகத்தில் இருந்து குப்பை ஏற்றி செல்லும் டாட்டா ஏசியில் சமைத்த உணவை ஏற்றிக்கொண்டு சென்றதை பார்த்த சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
ஊர் முழுவதும் தூய்மைப்படுத்தும் தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் உணவை எடுத்து சென்று பரிமாறுவது வேதனையிலும் வேதனை
இதுபோன்று செயல்பாடுகள் மிகவும் கண்டிக்கக் கூறியது என பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவித்து வருகின்றனர்